7 55
உலகம்செய்திகள்

வலுக்கும் ட்ரம்பின் நாடுகடத்தல் அச்சுறுத்தல்கள்!

Share

தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ஒரு வாரத்திற்குள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்றத்திற்கு எதிரான தனது அடக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தலை மேற்கொள்வதாக தனது பிரசார வாக்குறுதியை அவர் தற்போது வலுப்படுத்தியுள்ளார்.

ஜனவரி 20 அன்று ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க நடைமுறையாக்க (ICE) அமெரிக்கா முழுவதும் 3,500 க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத குடியேறிகளை கைது செய்துள்ளது.

இந்நிலையில் அவரது நிர்வாகம் நாடுகடத்தல் விமானங்களையும் அனுப்பத் தொடங்கியுள்ளன.

இதன்படி, 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் மெக்சிகோவிலிருந்து நான்கு மில்லியனுக்கும் அதிகமான அங்கீகரிக்கப்படாத குடியேறிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக தனது பதவியேற்பு நாளில், மெக்சிகோவுடன் பகிர்ந்து கொள்ளும் அமெரிக்க தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிக்கும் நிர்வாக நடவடிக்கையில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

இதன்படி அமெரிக்க இராணுவம் தெற்கு எல்லைக்கு 1,500 உள்ள துருப்புக்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாளில், சர்வதேச போதைப்பொருள் விற்பனையாளர்களை “பயங்கரவாத அமைப்புகள்” என்று நியமிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

குறிப்பாக மெக்சிகோவைக் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் கொலம்பியாவிலிருந்து 190,000 அங்கீகரிக்கப்படாத குடியேறிகள் இருந்ததாக பியூ மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

நாடுகடத்தப்படும் விமானங்கள் தொடர்பான பிரச்சினையில் கொலம்பியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வார இறுதியில் ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், நாடுகடத்தப்பட்ட கொலம்பிய குடிமக்களால் நிரப்பப்பட்ட இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களை கொலம்பிய ஜனாதிபதி பெட்ரோ தனது நாட்டில் தரையிறங்க அனுமதிக்க மறுத்தபோது இது தொடங்கியது.

இதன்படி ட்ரம்ப் நிர்வாகம் குடியேறிகளை மரியாதையுடன் நடத்தவில்லை என்று பெட்ரோ கூறியுள்ளார்.

கொலம்பிய பொருட்கள் மீதான வரிகளையும் கொலம்பிய அதிகாரிகள் மீதான விசா கட்டுப்பாடுகளையும் ட்ரம்ப் அச்சுறுத்தியதால், மோதல் விரைவாக அதிகரித்தது.

இதன்படி அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை விதிப்பதாக பெட்ரோ கூறினார்.

மேலும், கொலம்பிய வெளியுறவு அமைச்சர் லூயிஸ் கில்பர்டோ முரில்லோ ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் அதிகாரிகள் இந்த முட்டுக்கட்டையைச் சமாளித்து அமெரிக்கா அனுப்பிய நாடுகடத்தப்பட்டவர்களை ஏற்றுக்கொள்வார்கள் என்றும், கொலம்பியாவின் ஜனாதிபதி விமானத்தை கொலம்பியர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல உதவுவதற்காக நிறுத்துவார் என்றும் அறிவித்தார்.

2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் இந்தியாவில் இருந்து 725,000 அங்கீகரிக்கப்படாத குடியேறிகள் இருந்தாக தெரியவந்துள்ளது.

இது பியூ மதிப்பீடுகளின்படி, மெக்சிகோ மற்றும் எல் சால்வடாருக்குப் பிறகு மூன்றாவது அதிக எண்ணிக்கையாகும்.

ட்ரம்பும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் திங்களன்று தொலைபேசியில் பேசி, குடியேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக, புளோரிடாவில் உள்ள ஹவுஸ் குடியரசுக் கட்சியினருக்கு உரையாற்றிய போது அவர்,  அதே நாளில் கூறினார்.

மேலும், சட்டவிரோத குடியேற்றம் குறித்து இந்தியா “சரியானதைச் செய்யும்” என்றும், பெப்ரவரியில் மோடி அமெரிக்காவிற்கு வருவார் என்றும் கூறினார்.

2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் சீனாவிலிருந்து அங்கீகரிக்கப்படாத குடியேறிகள் 375,000 பேர் இருந்ததாக பியூ மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

அந்த எண்ணிக்கையில் ஹாங்காங் மற்றும் தைவானில் இருந்து குடியேறியவர்களும் அடங்குவர்.

சீனா திங்களன்று பிரதான நிலப்பகுதியிலிருந்து நாடுகடத்தப்படுபவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்வதாகக் கூறியது.

திருப்பி அனுப்புதல் தொடர்பாக, முதலில் சரிபார்த்து பின்னர் திருப்பி அனுப்புவதே சீனாவின் கொள்கை என சுட்டிக்காட்டியது.

மேலும், சீன நிலப்பரப்பிலிருந்து வந்தவர்கள் என சரிபார்க்கப்பட்ட சீன குடிமக்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம், என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் திங்களன்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதன்படி சீனாவின் பிரதான நிலப்பகுதி ஹாங்காங், மக்காவ் மற்றும் தாய்வானை உள்ளடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...