5 1
உலகம்செய்திகள்

காசாவை இலக்கு வைத்த ட்ரம்பின் அறிவிப்பு! மத்தியக்கிழக்கில் கடும் எதிர்ப்பு

Share

காசாவை சுத்தப்படுத்துவோம், பாலஸ்தீனியர்களை எகிப்து மற்றும் ஜோர்தானில் குடியமர்த்துவோம் என பரிந்துரைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டமானது மத்தியகிழக்கில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.

காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டத்தை ட்ரம்ப் முன்வைத்ததை தொடர்ந்து, எகிப்து மற்றும் ஜோர்தான் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

எனினும், இதற்கு இணங்க வேண்டும் என்று ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதன்படி ட்ரம்பின் முன்மொழிவு பரவலான கண்டனத்தைப் பெற்றுள்ளது.

இதன்படி விமர்சகர்கள் இதனை “இன அழிப்பு” மற்றும் “போர்க்குற்றம்” என்று தற்போது சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அரபு நாடுகளில் உள்ள பல நாடுகளும், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளும் இந்த யோசனையை திட்டவட்டமாக நிராகரித்துள்ளன.

இந்நிலையில் தற்போது எகிப்து, ஜோர்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜியம், கட்டார், பாலஸ்தீன ஆணையம் மற்றும் அரபு நாடுகள் கூட்டமைப்பு ஆகியவை காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களை தங்கள் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றும் எந்தவொரு திட்டத்தையும் ஏற்கபோவதில்லை என கூட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.

இவ்வாறான திட்டங்கள்”பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், மோதலை விரிவுபடுத்தும் அபாயமாகவும், அதன் மக்களிடையே அமைதி மற்றும் சகவாழ்வுக்கான வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்” என்று அரபு அறிக்கை மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தில் தங்குவதை உறுதி செய்வதற்கு அரபு கூட்டமைப்பு சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...