ரீகன் விளம்பரம் நீக்கப்படாததால் கோபம்: கனடாப் பொருட்களுக்கான வரிகளை 10% உயர்த்த டிரம்ப் அறிவிப்பு!

images 1 7

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் கொண்ட வரி எதிர்ப்பு விளம்பரத்தை ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதையடுத்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மீண்டும் ஒருமுறை அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், குறித்த விளம்பரத்தை ‘மோசடி’ (fraud) என அழைத்தார்.

மேலும், உலகத் தொடர் பேஸ்பால் சாம்பியன்ஷிப்பிற்கு முன்னதாக அந்த விளம்பரத்தை அகற்றாததற்காக கனேடிய அதிகாரிகளை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

வரி உயர்வு: “உண்மைகளை கனடா தவறாகச் சித்தரித்ததாலும், விரோதமான செயல்களாலும், கனடா மீதான வரியை, இப்போது செலுத்தும் தொகையை விட 10 வீதமாக உயர்த்துவதாக” டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையை முன்வைத்து, முன்னதாக, கடந்த வியாழக்கிழமை கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளிலிருந்து டிரம்ப் விலகினார்.

இதனையடுத்து ஒன்ராறியோ பிரதமரும் குறித்த விளம்பரத்தை நீக்குவதாகக் கூறியிருந்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததாலேயே டிரம்ப் தற்போது வரிகளை அதிகரித்துள்ளார்.

Exit mobile version