6 22
உலகம்செய்திகள்

காசா மீது தாக்குதலை தொடருங்கள்! ட்ரம்ப் பகிரங்க அறிவிப்பு

Share

காசா மீது தாக்குதலை தொடருங்கள்! ட்ரம்ப் பகிரங்க அறிவிப்பு

இந்த வார இறுதிக்குள் மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பு சனிக்கிழமை திட்டமிடப்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்துவதாகக் கூறியதைத் தொடர்ந்து, ட்ரம்ப் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இந்நிலையில் ட்ரம்பின் கருத்தானது, இது போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது குறித்து புதிய சந்தேகங்களை எழுப்பியுளள்ளது.

இது தொடர்பில் ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில்,

“சிறைபிடிக்கப்பட்டவர்கள் குறித்து ஹமாஸ் அமைப்பு அச்சங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் பலர் உயிர் பிழைக்க மாட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை, சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் அனைத்து பணயக்கைதிகளும் திருப்பி அனுப்பப்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மேற்கொண்டுள்ள பணயக்கைதிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாகக் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக, சனிக்கிழமை திட்டமிடப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்த விரும்புவதாக ஹமாஸ் அறிவித்த சில மணி நேரத்திற்குள் ட்ரம்பின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...