rtjy 144 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான தூதரக மோதல்: ட்ரூடோ எச்சரிக்கை

Share

இந்தியாவுடனான தூதரக மோதல்: ட்ரூடோ எச்சரிக்கை

பெரிய நாடுகள் விளைவுகள் எதையும் எதிர்கொள்ளாமல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது என்றால் உலகம் அனைவருக்கும் மிக ஆபத்தான ஒன்றாக மாறும் என கனேடிய பிரதமர் ட்ரூடோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவுடனான தூதரக மோதல் நீடிக்கும் நிலையிலேயே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

காலிஸ்தானி அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக ட்ரூடோ குற்றம் சாட்டியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆனால் பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்த இந்தியா அவரது குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையிலேயே ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ட்ரூடோ,

“கனேடிய மண்ணில் கனேடிய குடிமகன் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்ற நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்குத் தெரிந்தபோது, இந்த விடயத்தின் உண்மைத்தன்மையை அறிய எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு நாங்கள் இந்தியாவை அணுகினோம்.

அதுமட்டுமின்றி, அமெரிக்கா போன்ற எங்கள் நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளையும் நாங்கள் அணுகினோம்.

கனடா எப்போதும் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நாடு என குறிப்பிட்டுள்ள ஜஸ்டின் ட்ருடோ, இந்தியாவை மறைமுகமாக குறிப்பிட்டு பெரிய நாடுகள் விளைவுகள் எதையும் எதிர்கொள்ளாமல் சர்வதேச சட்டத்தை சர்வ சாதாரணமாக மீறுகிறது என்றால் உலகம் அனைவருக்கும் மிக ஆபத்தான ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட கனடா முயற்சித்துள்ளது, அது தொடர்ந்து செய்யும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 23
செய்திகள்உலகம்

ஈரான் போர்நிறுத்தத்தின் பின்னணியில் சீனா ? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்!

ஈரானுடனான இரண்டு வார காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை “முழுமையான மற்றும் மிகப்பெரிய வெற்றி” என்று அமெரிக்க...

world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...