அதிவேகத்தில் டீக்கடைக்குள் புகுந்த லொறி! 5 ஐயப்ப பக்தர்கள் பலி

1200x627 1581604914808

தமிழக மாவட்டம் புதுக்கோட்டையில் டீக்கடைக்குள் லொறி புகுந்து விபத்தை ஏற்படுத்தியதில் 5 பேர் பலியாகினர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லொறி ஒன்று வந்துகொண்டிருந்தது.

அரியலூரில் இருந்து வந்த அந்த லொறி நந்தனசமுத்திரம் அருகே வந்தபோது ஓட்டுனரை கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாலையோரம் இருந்த டீக்கடை ஒன்றில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. அத்துடன் அருகில் இருந்த வேன் மற்றும் கார் மீதம் அந்த லொறி மோதியதில் ஐந்து பேர் பலியாகினர்.

அவர்கள் அனைவரும் ஐயப்ப பக்தர்கள் என்றும், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 19 பக்தர்கள் படுகாயமடைந்ததாகவும், அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Exit mobile version