லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம்
உலகம்செய்திகள்

லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம்

Share

லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம்

தமிழகத்தில் கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள சென்னை தரமணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரகு. இவருக்கு வயது 26. இவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹேமலதா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஹேமலதா, கிண்டியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பிபிஏ 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை பெரம்பூரில் உள்ள தன்னுடை தாய் வீட்டிற்கு ஹேமலதா தனது கணவருடன் இருச்சக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது, அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே வரும் போது பின்னால் வந்து கொண்டிருந்த சிமெண்ட் கலவை லொறி இருச்சக்கரவாகனத்தின் மீது மோதியது.

இருச்சக்கரவாகனத்தின் மீது லொறி மோதியதில் ஹேமலதா கீழே விழுந்தார். அப்போது, ஹேமலதா தலையின் மீது லொறியின் சக்கரம் ஏறி இறங்கியதில் கணவர் கண்முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதில், ரகு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இச்சம்பவத்தை அறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு பொலிசார் உயிரிழந்த ஹேமலதாவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லொறி ஓட்டுநர் ஆசாத் (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த தன் மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கணவர் அழுத நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...