OIP 6
உலகம்செய்திகள்

பிரித்தானிய நகரமொன்றைப் புரட்டிப்போட்ட சூறாவளி: வெளியாகியுள்ள புகைப்படங்கள்

Share

பிரித்தானியாவை புயலொன்று தாக்கிய நிலையில், இங்கிலாந்திலுள்ள முக்கிய நகரமொன்றை சூறாவளியொன்று துவம்சம் செய்துள்ளது.

பிரித்தானியாவை Gerrit என்று பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று தாக்கிய நிலையில், இங்கிலாந்திலுள்ள கிரேட்டர் மான்செஸ்டர் நகரை நேற்றிரவு சூறாவளி ஒன்று துவம்சம் செய்துள்ளது.

Stalybridge என்னும் இடத்திலுள்ள கட்டிடங்கள் இந்த சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், மக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இருந்ததாக தகவல் இல்லை. மக்களில் பலர் தங்கள் விடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பொறியாளர்கள் வீடுகளை ஆய்வு செய்யும் வரை, மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், காற்றில் பறக்கும் பொருட்களால் ஆபத்து ஏற்படலாம் என்பதால், வாகனங்களில் பயணிப்போர் Stalybridge பகுதியை முடிந்தால் தவிர்க்கவும், இல்லையென்றால், கவனமாக பயணிக்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தைக் காட்டும் புகைப்படங்களை இங்கு காணலாம்.

Share
தொடர்புடையது
04 4
செய்திகள்இலங்கை

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கோலாகல நிறைவு: 13,000 பக்தர்களுடன் பவனி!

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின்...

Untitled 1
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம்: ஜோர்தான் வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில், ஜோர்தான் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த...

ap26059256811672
செய்திகள்உலகம்

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: பிரம்மாண்டமான நடவடிக்கை என டிரம்ப் அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள்...

15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...