OIP 7
உலகம்செய்திகள்

கோடிக்கணக்கான ரூபாய் கடனிலிருந்து நடிகர் சங்கத்தை மீட்டவர் விஜயகாந்த்: சீமான் இரங்கல்

Share

நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு நாம் தமிழர் கட்சி சீமான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், நுரையீரல் அழற்சி காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் இன்று காலை காலமானார்.

விஜயகாந்த் உடல் நாளை மாலை 4.45 மணி அளவில் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவிற்கு பலரும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சீமான் தனது இரங்கல் செய்தியில், “தமிழ்த்திரைத்துறையில் தமது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகனாகத் திகழ்ந்த ஆகச்சிறந்த திரைக்கலைஞர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றிருந்தபோது, அனைவரையும் ஒருங்கிணைக்கும் கனிவுமிக்கப் பெருங்குணத்தாலும், நிர்வாகத் திறமையாலும் கோடிக்கணக்கான ரூபாய் கடனிலிருந்து நடிகர் சங்கத்தை மீட்ட பெருமைக்குரியவர். தம் நண்பர்கள் பலரின் திரைத்துறை வளர்ச்சிக்கு காரணமாகத் திகழ்ந்த பெருந்தகை.

தான் நடிக்கும் படப்பிடிப்பு தளமானாலும், தமது அலுவலகமானாலும் பசியோடு யாரும் இருந்திடக்கூடாது என்று தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி. தமிழ்த்திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் அவர் படைத்த சாதனைகள் காலத்தால் அழியாதவை. கேப்டன் விஜயகாந்தின் புகழ் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் என்றென்றும் நீங்காது நிலைத்திருக்கும்.

கேப்டன் விஜயகாந்தின் மறைவால் துயருற்றுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் அம்மையார் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு அருகில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக, நாளை (மே 11) அளவில்...

world 55
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை, மே 10)...

world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...