17 17
உலகம்செய்திகள்

கனடாவின் 2025ஆம் ஆண்டிற்கான முதல் 10 பல்கலைக்கழகங்களின் பட்டியல்

Share

கனடாவின் 2025ஆம் ஆண்டிற்கான முதல் 10 பல்கலைக்கழகங்களின் பட்டியல்

கனடாவில் உயர்கல்வியைத் தொடரும் நோக்கத்தில் இருப்பவர்களுக்காக அந்நாட்டின் முதல் 10 பல்கலைக்கழகங்களின் தரவரிசைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மெக்லீனின் இந்த 2025ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக தரவரிசை, மூன்று பிரிவுகளில் பல்கலைக்கழகங்களை வகைப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, விரிவான பல்கலைக்கழகங்கள், முதன்மையான இளங்கலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ முனைவர் பல்கலைக்கழகங்கள் என்றே வகைப்படுத்தியுள்ளது.

எனவே, இந்த தரவரிசையானது, ஒரு விரிவான, இளங்கலைப் படிப்பை மையமாகக் கொண்ட அல்லது சிறந்த – ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தைத் தேடுபவர்களாக இருப்பினும் அவர்களின் கல்விப் பயணத்திற்கு வழிகாட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, McGill University, Montreal Quebec பல்கலைக்கழகமானது, சர்வதேச அளவில் உலகளாவிய தரவரிசையில் 56ஆவது இடத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் மூன்றாவது சிறந்த கனேடிய பல்கலைக்கழகம் Macleans புதிய பட்டியலின் தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது.

டொராண்டோ பல்கலைக்கழகம், உலகளாவிய தரவரிசையில் 17ஆவது இடத்திலும் மெக்லீன்ஸின் தரவரிசையில் 2ஆம் இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஆராய்ச்சிகளுக்கு சிறந்து விளங்குகின்றது.

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் (யுபிசி), உலகளவில் 39ஆவது இடத்தில் உள்ளதுடன் மெக்லீனின் தரவரிசையில் 3ஆம் இடத்திலுள்ளதுடன் பல துறைகளில், குறிப்பாக சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் இப்பல்கலைகழகம் சிறந்து விளங்குகின்றது.

மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம், ஹாமில்டன், ஒன்டாரியோ, 4 சிறந்த கனேடிய பல்கலைக்கழகமாகவும் சுகாதார அறிவியல் மற்றும் மருத்துவத்தில் அதன் தனித்துவமான கற்றலுக்கு சிறந்து விளங்குகின்றது.

ஒட்டாவா பல்கலைக்கழகம், ஒட்டாவா பல்கலைக்கழகம் உலகின் மிகப்பெரிய இருமொழி (ஆங்கிலம் – பிரெஞ்சு) பல்கலைக்கழகம் ஆகும். இது இரண்டு மொழிகளிலும் பாடதிட்டங்களை வழங்குகிறது.

ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம், விவசாயம், ஆற்றல் மற்றும் சுகாதார அறிவியல் முழுவதும் ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் மெக்லீனின் தரவரிசையில் 6ஆம் இடத்திலுள்ளது.

டல்ஹௌசி பல்கலைக்கழகம், ஹாலிஃபாக்ஸ், நோவா ஸ்கோடியா, விஞ்ஞான அறிவியல் மற்றும் சட்ட திட்டங்களுக்கு பெயர் பெற்ற இப்பல்கலைகழகம் 6ஆவது நிலையில் உள்ளது. குயின்ஸ் பல்கலைக்கழகம், கிங்ஸ்டன், ஒன்டாரியோ, பொறிமுறை தொழில்நுட்பம் மற்றும் வணிக வலுவான திட்டங்களை வழங்குகின்றது.

யுனிவர்சிட்டி டி மாண்ட்ரீல், மருத்துவம் மற்றும் கலைகளில் வலுவான திட்டங்களை வழங்குகிறது. அத்துடன், மெக்லீனின் தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ளது.

கால்கேரி பல்கலைக்கழகம், வணிக கண்டுபிடிப்பு மற்றும் ஆற்றல் தொடர்பான ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ளதுடன் மெக்லீனின் தரவரிசையில் 9ஆவது இடத்தை பிடித்துள்ளது.

வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி, லண்டன், ஒன்டாரியோ, வணிகம் மற்றும் சுகாதார அறிவியலில், குறிப்பாக நரம்பியல் அறிவியலில் சிறந்து விளங்குகின்றதுடன் அந்த வரிசையில் இறுதி இடத்தை பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...