மருத்துவமனையில் ஹமாஸ் பதுக்கிவைத்த பெருந்தொகையான ஆயுதங்கள்
காசா அல்ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் படையினர் பெருந்தொகையான ஆயுதங்களை பதுக்கிவைத்திருக்கும் காணொளியை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.
மேலும், காசாவின் அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் ஹமாஸ் கட்டளை மையத்தை கட்டியிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்து தானியங்கி ஆயுதங்கள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் ஃபிளாக் ஜாக்கெட்டுகளை இஸ்ரேலிய இராணுவம் கைப்பற்றிய காணொளி வெளியாகியுள்ளது.
அல் ஷிஃபா மருத்துவமனையின் சுரங்கப்பாதையில் புல்டோசர்களைக் கொண்டு இஸ்ரேலிய வீரர்கள் தேடி வருகின்றனர்.
மேலும், ” நாங்கள் ஷிஃபா மருத்துவமனையை குறிவைத்து ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டோம். நாங்கள் தொடர்ந்து முன்னேறுகிறோம்,” என்று காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் யாரோன் ஃபிங்கெல்மேன் இராணுவத்தின் டெலிகிராம் சேனலில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய மருத்துவமனையைச் சுற்றி புல்டோசர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படைகள் வளாகத்திற்குள் நுழைந்ததால் அனைத்து துறைகளுக்கும் தண்ணீர், மின்சாரம் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை துண்டிக்கப்பட்டதாக அல் ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கூறியுள்ளார்.