6 2 scaled
உலகம்செய்திகள்

IT, ED எல்லாம் பாஜகவின் அணிகள்: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

Share

IT, ED எல்லாம் பாஜகவின் அணிகள்: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் பாஜகவின் அணிகள் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி, சென்னை தி.நகர், அண்ணா சாலை, கீழ்பாக்கம், வேப்பேரி, ஆகிய இடங்களில் 30க்கும் மேற்பட்ட கார்களில் சென்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க அரசு சார்பாக சென்னையில் நீட் விலக்கு தொடர்பாக தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் பாஜகவின் அணிகள் என்று விமர்ச்சித்துள்ளார்.

அத்துடன் கடந்த 2,3 மாதங்களாக பாஜக அணிகள் செயல்பாடு அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

நீட் விலக்கு என்பது தமிழக மாணவர்களுக்கான உரிமை என்பதால் கூட்டணி கட்சி தலைவர்களிடமும் கையெழுத்து பெற்று வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...