rtjyt scaled
உலகம்செய்திகள்

ஏலத்தில் டைட்டானிக் கப்பலின் உணவு பட்டியல்

Share

ஏலத்தில் டைட்டானிக் கப்பலின் உணவு பட்டியல்

டைட்டானிக் கப்பல் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியதில் கப்பலில் பயணித்த 1,500இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக அந்த கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவு பட்டியல் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஏல விற்பனை தொடர்பாக ஏலதாரரான ஆன்ட்ரூ ஆல்ட்ரிச் தெரிவிக்கையில்,

“கப்பலில் பயணித்த வரலாற்று ஆசிரியரான கனடாவை சேர்ந்த லென் ஸ்டீபன்சன் என்பவர் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை வைத்திருந்தார். இது அவரது குடும்பத்தினர் உட்பட யாருக்கும் தெரியாது.

2017 ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு அவரது உடமைகளை அவரின் மகளும், மருமகளும் பார்வையிட்ட நிலையில் இந்த டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட மெனுவை பழைய புகைப்பட ஆல்பத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர் ”என தெரிவித்துள்ளார்.

விரைவில் ஏலத்திற்கு வர உள்ள அந்த உணவு பட்டியலில் பல உயர்தர உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த உணவு பட்டியல் 60 ஆயிரம் யூரோவிற்கு ஏலம் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...