இந்த வார இறுதியில் காத்திருக்கும் பேரழிவு: திகில் கிளப்பும் Time Traveller

tamilni 278

இந்த வார இறுதியில் காத்திருக்கும் பேரழிவு: திகில் கிளப்பும் Time Traveller

இந்த வார இறுதியில், இயற்கைப் பேரழிவு ஒன்றினால் ஒரு நகரமே அடித்துச் செல்லப்பட இருப்பதாக Time traveller ஒருவர் திகில் கிளப்பும் செய்தி ஒன்றைக் கூறியுள்ளார்.

தன்னை, 2671ஆம் ஆண்டிலிருந்து பூமிக்கு வந்துள்ள Time traveller என அழைத்துக்கொள்ளும் Eno Alaric என்பவர், 2024ஆம் ஆண்டில், நிலநடுக்கங்கள் முதலான பல்வேறு மோசமான விடயங்கள் நிகழ இருப்பதாக எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, இந்த வார இறுதியில், அதாவது, பிப்ரவரி 17ஆம் திகதி, அமெரிக்காவிலுள்ள Houston நகரத்தை பயங்கர சூறாவளி ஒன்று தாக்க இருப்பதாகவும், கிட்டத்தட்ட முழு நகரத்தையும் அது அழித்துவிடும் என்றும், மனித இன வரலாற்றிலேயே அது மிக மோசமான சூறாவளியாக இருக்கும் என்றும் Eno கூறியுள்ளார்.

இதற்கிடையில், சிலர் அவரை கேலி செய்தும், சிலர் வீடியோ ஆதாரங்கள் தருமாறும் சமூக ஊடகங்களில் கேட்க, இவர் நல்ல விடயங்களையே கூறமாட்டாரா, எல்லாமே மோசமான விடயங்களாகவே கூறுகிறாரே என சிலர் விமர்சித்துள்ளனர்.

Exit mobile version