வங்காளதேசத்தில் இடம்பெற்ற கலவரமொன்றில் பத்திரிகையாளர் உட்பட மூன்று பேர் சாவடைந்துள்ளனர்.
வகுப்புவாத கலவரமே வங்காளதேசத்தில் இடம்பெற்றதாகவும், இச்சம்பவத்தில் 60 பேர் காயமடைந்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி தின சிறப்பு வழிபாடுகள் வங்காளதேசத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் வங்காளதேசத்தில் அண்மையில் காணொலி ஒன்று வெளியானது.
இதன் தொடர்ச்சியாக திகிர்பார் என்ற இடத்தில் முஸ்லிம் அமைப்புகள் கூட்டம் நடாத்திக்கொண்டிருந்த நிலையில், அந்த மண்டபத்தில் குழுவொன்று தாக்குதலில் ஈடுபட்டது.
இச்சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்ததுடன், 144 தடை உத்தரவும் அப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment