8 26 scaled
உலகம்செய்திகள்

தன் மகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதைக் கேட்டு புன்னகைத்த தந்தை

Share

தன் மகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதைக் கேட்டு புன்னகைத்த தந்தை

ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் தன் மகள் கொல்லப்பட்ட செய்தி கேட்டு தான் ஆறுதலடைந்ததாக ஒரு தந்தை கூறும் செய்தி, உண்மையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பயங்கர முகத்தை உலகம் கண்டுகொண்டதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் காட்டுமிராண்டித்தன தாக்குதல்களில் பலியான குழந்தைகளில் ஒன்று, அயர்லாந்தைச் சேர்ந்த தாமஸின் (Thomas Hand) குழந்தை.

தன் மகளுக்கு என்ன ஆனதோ என தான் கவலையில் இருந்தபோது, அவள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலில் கொல்லப்பட்டாள் என்ற செய்தி கேட்டு, நான் ஆறுதலடைந்தேன், புன்னகைக்கக் கூட செய்தேன் என்று கூறியுள்ளார் தாமஸ். தாமஸின் மகள் பெயர் எமிலி (Emily, 8).

நான் கேட்ட ஆறுதலளிக்கும் செய்தி அதுவாகத்தான் இருக்க முடியும் என்கிறார் தாமஸ். ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பெண்களை என்ன செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால், அது சாவை விட மோசமானது என்பது உங்களுக்குப் புரியும் என்கிறார் தாமஸ்.

அதாவது, தன் அழகான பெண் குழந்தை ஹமாஸ் ஆயுதக்குழுவின் கையில் சிக்கி, அவர்களால் சீரழிக்கப்படுவதைவிட, அவள் இறந்துவிட்டாள் என்று தனக்குக் கிடைத்த செய்தி தன்னை ஆறுதலடையச் செய்கிறது என்கிறார் தாமஸ்.

கர்ப்பிணியின் வயிற்றுக்குள்ளிருக்கும் குழந்தைகளையே விடாதவர்கள், குழந்தைகளின் கைகளைக் கட்டிவைத்து, தீவைத்துக் கொளுத்தி ரசிப்பவர்கள் கையில், தன் மகள் எமிலி சிக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என எண்ணிக் கலங்கிக்கொண்டிருந்த தாமஸுக்கு, அவளது மரணம் ஆறுதலையளித்துள்ளதில் ஆச்சரியம் இல்லையே!

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...