உலகம்செய்திகள்

இது ஏற்றுக்கொள்ள முடியாதது, வன்மையாக கண்டிக்கிறேன்! கொந்தளித்த ஜஸ்டின் ட்ரூடோ

Share
3 scaled
Share

இது ஏற்றுக்கொள்ள முடியாதது, வன்மையாக கண்டிக்கிறேன்! கொந்தளித்த ஜஸ்டின் ட்ரூடோ

Mississauga மசூதிக்கு எதிரான தாக்குதல், கியூபெர்க் நகர மசூதி தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 29ஆம் திகதி கியூபெக் நகர மசூதி தாக்குதல் மற்றும் Islamophobia-விற்கு எதிரான நடவடிக்கையின் தேசிய நினைவு தினத்தில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், ‘ஏழு ஆண்டுகளுக்கு முன்பு Sainte-Foy யில் உள்ள சென்டர் Culturel islamique de கியூபெக்கில், துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் Ibrahima Barry, Mamadou Tanou Barry, Khaled Belkacemi, Abdelkrim Hassane, Azzedine Soufiane மற்றும் Aboubakar Thabti ஆகியோர் தங்கள் உயிரை இழந்தனர்.

அவர்கள் மகன்கள், சகோதரர்கள், தந்தைகள் மற்றும் நண்பர்கள், பெருமைமிக்க இஸ்லாமியர்கள், Quebecers மற்றும் கனேடியர்கள். ஆனால், அவர்கள் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தினால் தான் குறிவைக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 அன்று, இந்த கொடூரமான வெறுப்பு செயலால் நாம் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்’ என தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வழிபாட்டுத் தலங்கள் சமூக மக்கள் கூடும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும்.

இந்த வார தொடக்கத்தில் Mississauga மசூதிக்கு எதிரான தாக்குதல் – கியூபெக் நகர மசூதி தாக்குதல் மற்றும் தேசிய நினைவு தினத்தில் Islamophobia-விற்கு எதிரான நடவடிக்கை கோழைத்தனமானது, கவலையளிக்கிறது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். Islamophobia-விற்கு நமது எந்த சமூகத்திலும் இடமில்லை’ என தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...