8 13
உலகம்செய்திகள்

முற்றாக அழியப் போகின்றதா ஆண் இனம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Share

முற்றாக அழியப் போகின்றதா ஆண் இனம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆண் இனமே அழிந்து போகும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு பெண் கருத்தரித்த 12 வாரங்களில் பாலினத்தை நிர்ணயிக்கும் பகுதியான Y குரோமோசோமின் முதன்மை மரபணு ஆண் இனப்பெருக்க உறுப்புகளை உருவாக்குவதற்கு மரபணு பாதையை செயல்படுத்துகிறது.

இந்த மரபணு மற்றொரு முக்கிய மரபணுவான SOX9 தூண்டுவதன் மூலம் செயல்படுகிறது இது இந்த குழந்தை ஆணாக வளர்வதை உறுதி செய்கிறது.

அந்தவகையில், இந்த Y க்ரோமோசோம் குறைந்து வருவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

அதாவது, கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம் அதன் சொந்த 1438 மரபணுக்களில் 1393 ஐ இழந்துவிட்டதாக மரபியல் பேராசிரியரான ஜெனிபர் ஏ. மார்ஷல் கிரேவ்ஸ் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள மரபணுக்களும் இன்னும் 10 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும் இழந்துவிடலாம் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகையால், 10 மில்லியன் அண்டுகள் கழித்து முழுவதுமாக ஆண்கள் இனம் அழிந்துவிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வுக்கு ஜப்பானில் நடத்தப்பட்ட ஸ்பைனி எலி குறித்த ஆராய்ச்சி ஆறுதல் அளித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...