குவைத் நாட்டில் வீதியில் சுற்றித் திரிந்த சிங்கத்தைப் பெண் ஒருவர் தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
வளைகுடா நாடுகளில் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் காணப்படுகிறது.
இந்த நிலையில், குவைத்தில் உள்ள சாபியா பகுதியில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்கக்குட்டி, அங்கிருந்து வெளியே தப்பிச் சென்றுள்ளது. இதனையடுத்து இது குறித்து உரிமையாளர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அந்த சிங்கக்குட்டியை வளர்த்த பெண், அந்த சிங்கம் இரவில் சாலையில் சுற்றித்திரிவதைக் கண்டு அதனை குழந்தையை தூக்குவது போல தூக்கிச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#WorldNews
Leave a comment