4 6 scaled
உலகம்செய்திகள்

பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்க தூண்டும் அமெரிக்கா… பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நாடு

Share

பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்க தூண்டும் அமெரிக்கா… பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நாடு

காஸா பகுதியில் கொடூர நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், அப்பாவி மக்களை கொன்று குவிக்கவும் இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிப்பதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதலை முன்னெடுத்ததில், 1,400 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்திருந்தது. அத்துடன் 240 பேர்களை பணயக்கைதியாகவும் ஹமாஸ் பிடித்துச் சென்றது.

அதன் பின்னர் பதில் தாக்குதல் முன்னெடுப்பதாக கூறி, இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது.

இந்த நிலையில் தான், அமெரிக்காவின் கண்மூடித்தனமான ஆதரவு இஸ்ரேலை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக கொடூரமான செயல்களை செய்யவும் கொல்லவும் ஊக்குவிப்பதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், குண்டுவீச்சுகள் விரைவில் நிறுத்தப்பட வேண்டும், போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி புறக்கணிக்கப்பட்ட அப்பாவி காஸா மக்களுக்கு உரிய மனிதாபிமான உதவிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

மனிதகுலத்திற்கு எதிரான இந்த கொடூரமான குற்றங்கள் இனப்படுகொலை என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ரைசி, இது அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேலால் நடத்தப்படுகிறது என்றார்.

இதனிடையே, ஹமாஸ்-இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள இராணுவ தளங்களை குறிவைத்து ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஈராக் ஈரானுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளது, இரு நாடுகளும் இதுவரை இஸ்ரேல் அரசாங்கத்தை அங்கீகரித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...