சீனாவுடன் கைகோர்க்கும் தலிபன்கள்!
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் எதிர்பாரா எழுச்சியடைந்த தலிபானகள் ஆப்கான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில் தலிபன்கள் சீனா தங்களின் முக்கிய கூட்டாளி என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில்,
ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த சீனா பெரிதும் உதவி புரியும். எங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நிதி அளிக்க சீனா தயாராக உள்ளது.
ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் காணப்படுகின்றன. அவற்றை சீனாவின் உதவியுடன் செயற்பட வைக்க முடியும். நவீனமயமாக்கலாம். அத்துடன் சீனா ஊடாக உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் எங்கள் சுரங்க தயாரிப்புகளை எடுத்துச்செல்லலாம்.
எனவே எங்களின் முக்கிய கூட்டாளி சீனாவே எனத் தெரிவித்துள்ளார்.