நைஜீரியாவின் தென்மேற்கு மாநிலமான ஒன்டோவில் தேவாலயம் ஒன்றுக்குள் சிக்கி இருந்த சிறுவர்கள் உட்பட 77 பேரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் பல மாதங்களாக அங்கு சிக்கி இருந்ததாக நம்பப்படுகிறது.
ஏப்ரலில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகை நிகழவிருப்பதாக இவர்களுக்கு கூறப்பட்டுள்ளது. இதனால் அந்த நிகழ்வை பார்ப்பதற்காக பலரும் பாடசாலையை கைவிட்டு தேவாலயத்தில் காத்திருந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பிள்ளைகளை காணவில்லை என்றும் அவர்கள் தேவாலயத்தில் இருப்பதாக தாம் நம்புவதாகவும் தாய் ஒருவர் பொலிஸில் முறையிட்டதை அடுத்தே இந்தத் தேடுதல் இடம்பெற்றுள்ளது. கூட்டுக் கடத்தல் சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேவாலயத்தின் பாதிரியார் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#WorldNews
Leave a comment