பயணிகளை நோக்கி கூச்சலிட்ட நபர்! உடனடியாக தரையிறங்கிய விமானம்
உலகம்செய்திகள்

பயணிகளை நோக்கி கூச்சலிட்ட நபர்! உடனடியாக தரையிறங்கிய விமானம்

Share

பயணிகளை நோக்கி கூச்சலிட்ட நபர்! உடனடியாக தரையிறங்கிய விமானம்

அவுஸ்திரேலியாவில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், பயணிகளை நோக்கி திடீரென கேள்வி எழுப்பியதால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிட்னியில் இருந்து கோலாலம்பூருக்கு MH122 Airbus-a330 எனும் விமானம் புறப்பட்டது. அப்போது பயணி ஒருவர் சக பயணிகளை நோக்கி ‘நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளா?’ எனக் கேட்டு கூச்சலிட்டுள்ளார்.

அவரது இந்த செயல் பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து விமானக் குழுவினர் சந்தேகமடைந்து அவரது பையை ஆய்வு செய்தனர்.

ஆனால் அதில் ஆபத்தான எதுவும் இல்லை என தெரிந்தது. எனினும் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மாலை 4 மணிக்கு முன்னதாக விமானம் மீண்டும் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மேலும் விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் ஒன்றின் முடிவில் விமானம் தனிமைப்படுத்தப்பட்டது. அவசரகால வாகனங்கள் விமானத்தை சுற்றி வளைத்ததைத் தொடர்ந்து பயணிகள் இறங்கினர்.

சில பயணிகள் ஜெட் விமானத்தின் மற்றொரு பகுதிக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில் முகமது என்று கூறிக்கொண்ட அச்சுறுத்தலை ஏற்படுத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...