பல மில்லியன் சொத்தை செல்லப்பிராணிக்கு எழுதி வைத்த மூதாட்டி: அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா?

24 65b5e7a8abdf2

பல மில்லியன் சொத்தை செல்லப்பிராணிக்கு எழுதி வைத்த மூதாட்டி: அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா?

சீனாவில் மூதாட்டி ஒருவர் தன்னுடைய ரூ.28 லட்சம் சொத்தை செல்லப்பிராணிகள் பேரில் எழுதி வைத்துள்ளார்.

சீனாவின் ஷாங்காய் பகுதியை சேர்ந்த லியு என்ற மூதாட்டி ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய 3 குழந்தைகளின் பெயரில் சொத்து உயில் எழுதி வைத்துள்ளார்.

ஆனால் இதன் பிறகு மூதாட்டி லியு-க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது அவரது 3 குழந்தைகளில் யாரும் அவரை கவனித்து கொள்ள வரவில்லை என்பதால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் மனம் மாறிய மூதாட்டி லியு தன்னுடைய 20 மில்லியன் யுவான்(ரூ.28 லட்சம்) சொத்தை தன்னுடைய வளர்ப்பு பூனை மற்றும் நாய்களின் பெயரில் எழுதி வைத்துள்ளார்.

இது தொடர்பாக லியு செய்தி நிறுவனத்திடம் வழங்கிய கருத்தில், தனக்கு உடல்நிலை மோசமாக இருந்த போது செல்லப்பிராணிகள் தன்னுடன் முழுவதுமாக இருந்தன என தெரிவித்துள்ளார்.

சீனாவில் செல்லப்பிராணிகளுக்கு சொத்துக்களை எழுதி வைப்பதற்கு சட்டப்பூர்வ விதிகள் இல்லை,  எனவே அவரது செல்லப்பிராணிகளை அக்கறையோடு கவனித்து கொள்ள நம்பகமான நபர் ஒருவரை நியமித்து தன்னுடைய சொத்துகளை செல்லப்பிராணிகளுக்கு செலவு செய்யலாம் என்ற அறிவுரை லியு-க்கு வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version