23 64fd6d7624a24
உலகம்செய்திகள்

முதியவருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

Share

முதியவருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

அமெரிக்காவை சேர்ந்த பள்ளி பேருந்து சாரதி ஒருவர் சுமார் 1,00,000 டொலர் லொட்டரியில்  வெற்றி பெற்றவுடன் தனது வேலையில் இருந்து வெளியேறுவதாக முதலாளிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் கென்டக்கி பகுதியை சேர்ந்த அமெஸ் கியூன் என்பவர் ஜெபர்சன் கவுண்டி பொதுப் பள்ளி ஒன்றில் பேருந்து சாரதியாக பணி புரிந்து வந்துள்ளார்.

இவர் சமீபத்தில்  கென்டக்கி லொட்டரி பவர்பாலில் சரியான நான்கு வெள்ளை பந்துகளை எடுத்ததன் மூலம் சுமார் 1,00,000 டொலர் லொட்டரியில் வெற்றி பெற்றுள்ளார்.

இது தொடர்பாக அமெஸ் கியூன் பேசிய போது, நான் லொட்டரியை பல முறை பார்த்தேன், எண்கள் மாறுகிறதா என்று, ஆனால் அது மாறவில்லை, நான் வெற்றி பெறுவதையே மிகவும் நல்லது என்று எண்ணிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தான் லொட்டரியில் வெற்றி பெற்றவுடன் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக தனது தினசரி வேலையில் இருந்து வெளியேறுவது தொடர்பாக முதலாளிக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

அதில், நான் லொட்டரியில் வெற்றி பெற்றுள்ளேன், மேலும் நான் வேலைக்கு திரும்பி வரப்போவது இல்லை என்று தெரிவித்தேன் என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் நான் எனது வேலையை மிகவும் நேசிக்கிறேன், ஆனால் இந்த லொட்டரியின் மூலம் சிறிது முன்கூட்டியே ஓய்வு பெறுவதை குறித்து யோசிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...