2 26 scaled
உலகம்செய்திகள்

விரைவில் Tourist Visa வழங்கவுள்ள மர்ம நாடு! டொலர்கள் சம்பாதிக்கும் திட்டத்தில் சர்வாதிகாரி

Share

விரைவில் Tourist Visa வழங்கவுள்ள மர்ம நாடு! டொலர்கள் சம்பாதிக்கும் திட்டத்தில் சர்வாதிகாரி

வட கொரியாவில் சுற்றுலா பயணிகளுக்கான ஆடம்பர ரிசார்ட் திறக்கப்படவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு அந்நாட்டில் சுற்றுலா விசாக்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜொங் உன் (Kim Jong Un) நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சித்து வருகிறார். அதன் முக்கிய அங்கமாக, கிம் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வருகிறார்.

இதற்காக பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா வழங்கப்படவுள்ள தெரிவிக்கின்றன.

வட கொரியா எனும் இந்த மர்மமான நாட்டிற்கு செல்ல எத்தனை பேர் விரும்புகிறார்கள் அல்லது அங்கு செல்வதற்கு தைரியமாக முன்வருவார்கள் என்பது வேறு விஷயம்.

கிம்மின் இந்த திட்டம் குறித்து பிரிட்டிஷ் செய்தித்தாள்களான TheSun மற்றும் US Time Post செய்திகளை வெளியிட்டுள்ளன. இதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு வொன்சன் கல்மா பகுதியில் கிம் இந்த திட்டத்தை தொடங்கினார். இது வட கொரியாவின் மேற்கு கடல் கடற்கரை ஆகும்.

பின்னர் அதன் கட்டுமானமும் தொடங்கியது. இருப்பினும், இந்த நேரத்தில் கொரோனா காலம் வந்ததால், திட்டத்தை நிறுத்த வேண்டியிருந்தது.

இப்போது அதை விரைவில் முடிக்க கிம் உத்தரவிட்டுள்ளார், அவரே அதைக் கண்காணித்தும் வருகிறார்.

இதற்கிடையில், கடற்கரை ஓய்வு விடுதியில் Water Parks, Hotels, விமான நிலையங்கள் மற்றும் அனைத்து வகையான ஆடம்பர வசதிகளும் இருக்கும். ஓரிரு மாதங்களில் அது நிறைவடையும் என கூறப்படுகிறது.

வட கொரியாவை நெருக்கமாகப் புரிந்து கொண்ட பிரித்தானிய நிபுணர் மைக்கேல் மேடன் இது குறித்து கூறியுள்ளதாவது – “பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சகமும் இந்த விடயத்தில் ஒரு கண் வைத்திருக்கும். சிறிது நேரம் கழித்து, பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் இந்த ரிசார்ட்டை அனுபவிப்பதை காண முடியும். சுற்றுலாவை மேம்படுத்த வடகொரிய நிறுவனங்கள் சிறப்பு சுற்றுலா தொகுப்புகளை அறிவிக்கலாம்” என கூறியுள்ளார்.

இதையெல்லாம் மீறி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வட கொரியா மர்மமான நாடாக மட்டுமல்லாமல் ஆபத்தான நாடாகவும் கருதப்படுகிறது. தலைநகர் Pyongyang-ல் என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் தெரியாது, இந்த நிலையில் நாட்டின் பிற பகுதிகளில் நிலைமை என்னவாக இருக்கும் என்பது தான் மிகப்பாரிய கேள்வி. சுற்றுலா பயணிகள் இங்கு சென்று சிறு சிறு விடயங்களுக்காக கைது செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு.

இத்திட்டத்தின் 90% பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்கு மொத்தம் 150 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கிம் உதவி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால் வடகொரியாவின் பொருளாதாரம் சீரழிந்துள்ளதாக வடகொரியாவை உன்னிப்பாக கவனித்து வரும் நிபுணர் மைரா ஷெப்பர்ட் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் உதவி இல்லாமல் இந்த நாடு வாழ முடியாது. அவர்களுக்கு முதலீடு தேவை. சீனாவும் ரஷ்யாவும் எப்போதும் உதவ முடியாது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...