அரசியல்உலகம்

திருமண நிகழ்ச்சியை சீர்குலைத்த மொராக்கோ நிலநடுக்கம்

Share

திருமண நிகழ்ச்சியை சீர்குலைத்த மொராக்கோ நிலநடுக்கம்

மொராக்கோவில் திருமண நிகழ்ச்சியில் இசைக் கச்சேரி நடந்து கொண்டு இருந்த போது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் பாதியில் அலறியடித்து ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

மொராக்கோ நாட்டின் மாரகெச் நகரில் மக்கள் தூங்கி கொண்டு இருந்த போது ஏற்பட்ட 6.8 ரிக்டர் என்ற அளவில் பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும், அதில் 1404 பேர் வரை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் மக்கள் தூங்கி கொண்டு இருந்த போது ஏற்பட்டுள்ளதால் நிலநடுக்க பாதிப்புகளில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மொராக்கோவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இசைக் கச்சேரி நடந்து கொண்டு இருந்த போது பயங்கர நிலநடுக்கம் குறுக்கிட்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் இசைக் கச்சேரியில் கலந்து கொண்ட பாடகர், இசைக் கலைஞர்கள் மற்றும் விழாவில் கலந்து கொண்ட மக்கள் என பலர் மேடையை விட்டு வாசல் வழியாக தப்பியோடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
easter Sunday carnage 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சட்டத்தரணிகள் இன்றி பிரதிவாதியே குறுக்கு விசாரணை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள...

JOHNNY
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு மகன்களுக்கு மீண்டும் விளக்கமறியல்! – வத்தளை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும்...

image 9e7b416d27
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனநாயகத்தின் மரண மணி! – புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு ஜி.எல். பீரிஸ் கடும் எதிர்ப்பு!

இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ (PSTA), நாட்டின் ஜனநாயக சுதந்திரத்தைச்...

image 61acd342ce
அரசியல்இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு சேவைகள் உடனடியாக மீள ஆரம்பம்! – தொழில்நுட்பக் கோளாறு சீர்செய்யப்பட்டது: பொதுமக்கள் அவதானத்திற்கு!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு (Technical Malfunction)...