விழுந்தவரை காப்பாற்ற தன் உயிரை விட்ட அமைச்சர்!

image 0691028d06

தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட அமைச்சர் ஒருவர் தன் உயிரை விட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலைகள் துறை அமைச்சராக இருந்து பணியாற்றிய எவ்ஜெனி ஜினிச்சேவ் நேற்றுமுன்தினம் ஆர்க்டிக் பகுதியில் மீட்புக் குழுவினரின் பயிற்சி முகாம் ஒன்றை பார்வையிட சென்றுள்ளார் .

இதன்போது பாறையின் உச்சியிலில் நின்ற புகைப்பட கலைஞர் ஒருவர் தண்ணீரில் தடுமாறி விழுந்துள்ளார். இதனையடுத்து தண்ணீரில் விழுந்த குறித்த நபரை காப்பாற்ற முயன்றபோது அமைச்சர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அமைச்சர் ஜினிச்சேவ் ஜனாதிபதி புட்டினின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவில் நீண்டகாலமாக
பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version