சுற்றுலாப் படகு மாயம்
உலகம்செய்திகள்

ஜப்பானில் 26 பேருடன் சுற்றுலாப் படகு மாயம்!

Share

ஜப்பானில் 26 பேருடன் சென்ற சுற்றுலாப் படகைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோகைடோ தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து ‘காசு 1’ என்கின்ற படகு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. படகில் 2 சிறுவர்கள் உட்பட 24 சுற்றுலாப் பயணிகளும், 2 ஊழியர்களும் இருந்தனர். இந்தப் படகு நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது படகு ஆபத்தில் இருக்கின்றது எனக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. அதன் பின்னர் படகு கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதையடுத்து ஜப்பான் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ஹெலிஹொப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மாயமான படகைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

எனினும், படகு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதில் பயணம் செய்த 26 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. படகைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#WorldNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...