OIP 9
உலகம்செய்திகள்

கனடாவில் கனேடியர் கொல்லப்பட்ட விவகாரம்: கொலை செய்தவர் தொடர்பில் வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்

Share

கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டிய விடயம் இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அந்த கனேடியரைக் கொலை செய்த நபர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்டார்.

கனேடியரான நிஜ்ஜர் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நிஜ்ஜரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய ஊடகமான The Globe and Mail வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், நிஜ்ஜரை இரண்டு பேர் சுட்டுக்கொன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, அவர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சந்தேகத்துக்குரிய அந்த இருவரையும் பொலிசார் பல மாதங்களாக கண்காணித்துவருவதாகவும், அவர்கள் விரைவில் கனடா பொலிசாரால் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...