5 19 scaled
உலகம்செய்திகள்

காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்

Share

காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்

தமிழகத்தின் பொள்ளாச்சியில் காதல் மனைவியை 17 முறை கத்தியால் குத்திக்கொன்ற கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி புதுகாலனியை சேர்ந்தவர் டேவிட்(வயது 34), இவருக்கும் கற்பகம் என்ற பெண்ணுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிகளுக்கு தற்போது 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண்குழந்தையும் இருக்கிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் சில காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், டேவிட் தன் மனைவி கற்பகத்தை சந்தித்து மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என அழைத்திருக்கிறார்.

இதற்கு கற்பகம் மறுப்பு தெரிவிக்க இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த டேவிட் நேற்று முன்தினம் கற்பகத்தின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் வைத்து கற்பகத்தை மீண்டும்வாழ வருமாறு அழைத்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்ததால் டேவிட் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு கற்பகத்தை சரமாரியாக 17 தடவை குத்திக்கொலை செய்திருக்கிறார்.

இந்த தகவலையறிந்த பொலிஸார் டேவிட்டை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...