ஈரானுக்கு அச்சம்! தீவிரமாகும் பாதுகாப்பு
ஈரானிய அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக்கூடும் என்று சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் (IAEA) தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) டைரக்டர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸ்ஸி கூறுகையில், பாதுகாப்பு பரிசீலனைகளை கருத்தில் கொண்டு ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை ஞாயிற்றுக்கிழமை மூடிவிட்டது.
திங்களன்று அவை மீண்டும் திறக்கப்பட்டபோது, நிலைமை முற்றிலும் அமைதியாக இருப்பதை காணும் வரை அதன் நடவடிக்கைகளை IAEA நிறுத்தி வைத்துள்ளது.
ஆனால் இது எங்கள் ஆய்வு நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
எனவே நாங்கள் இன்று செவ்வாய்கிழமை மீண்டும் அணுசக்தி நிலையங்களின் நடவடிக்கைகளை தொடங்க போகிறோம் என்று க்ரோஸி நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள் எப்போதும் அக்கறை கொண்டுள்ளோம் என்றும் தீவிர கட்டுப்பாட்டை பேணுவதாகவும் கூறியுள்ளார்.