தொலைபேசி சார்ஜரை தொட்ட சிறுமி மின்சாரம் தாக்கி பலி!
கையடக்கத் தொலைபேசி சார்ஜரை தொட்ட இரண்டு வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
பிரேசிலின் எரெர் நகராட்சிப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், சாரா ஆல்வெஸ் டி அல்புகெர்க் என்ற 2 வயது சிறுமியே உயிரிழந்தார்.
சார்ஜரை தனது கைகளால் பிடித்த பின்னர் அவர் மின்சாரத் தாக்கத்துக்கு இலக்காகியநிலையில் சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
பிரேசிலில் கடந்த ஆண்டு மட்டும் மின்சாரத் தாக்கத்தால் 355 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
தொலைபேசியின் தயாரிப்பு நிறுவனம், அல்லது அது அங்கீகரிக்கப்பட்ட பிராண்டின் சார்ஜரா என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
பிரேசிலில் கடந்த ஆண்டு மட்டும் மின்சார அதிர்ச்சியால் 355 இறப்புக்கள் பதிவாகின.
Leave a comment