யூரோ வலயத்தில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய மத்திய வங்கி கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது.
அந்த வங்கி வட்டி வீதத்தை 0.0 வீதத்துக்கு 0.5 சதவீத புள்ளியாக முக்கிய வட்டி வீதத்தை அதிகரித்திருப்பதோடு இந்த ஆண்டில் மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக பலவீனமான வளர்ச்சிக்குப் பின்னர் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் 2014 தொடக்கம் வட்டி வீதம் எதிர்மறையாகவே இருந்து வருகிறது.
எனினும் உணவு, எரிபொருள் மற்றும் வலுசக்தி செலவுகள் அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் தொடக்கம் 12 மாதங்களில் நுகர்வோர் விலைவாசி சாதனை அளவாக 8.6 வீதம் அதிகரித்துள்ளது.
இது வங்கியின் 2 வீத இலக்கை விஞ்சியதாகும்.
விலைவாசி அதிகரிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியாக இங்கிலாந்து வங்கி மற்றும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி வீதத்தை அதிகரித்த நிலையிலேயே ஐரோப்பாவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
#World
Leave a comment