இந்தியாஉலகம்செய்திகள்

குழந்தையை கடித்து கொன்ற நாய்கள்!

3RTpqq4QHbQ8iQKfP8rw 1
Share

ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டம், மேட்டவலசா பகுதியை சேர்ந்தவர் ராம்பாபு. அப்பகுதியில் சாலையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு குசுமா மற்றும் சாத்விகா (வயது1) என இரண்டும் பெண் குழந்தைகள் இருந்தன.

நேற்று மாலை மகாலட்சுமி வீட்டிற்கு வெளியே உள்ள கட்டிலில் சாத்விகாவை தூங்க வைத்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டிருந்தார். மூத்த மகள் குசுமா தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.

அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கூட்டம் தூங்கி கொண்டிருந்த குழந்தை அருகே வந்தன. சாத்விகாவை திடீரென கட்டிலில் இருந்து கடித்து இழுத்து சென்றன அருகில் உள்ள தேக்கு மர தோப்பிற்குள் வேகமாக இழுத்துச் சென்ற நாய்கள் குழந்தையை கடித்து குதறின.

குழந்தை வலி தாங்க முடியாமல் கதறி துடித்தது. தங்கை அழும் சத்தத்தை கேட்ட குசுமா நாய்கள் சாத்விகாவை கடிப்பதை கண்டு அழுது கொண்டே வீட்டுக்குள் ஓடியது. இதுகுறித்து அவரது தாயாரிடம் கூறியதும் அவர் அலறி அடித்தப்படி வெளியே ஓடிவந்தார்.

அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று நாய்களை விரட்டி அடித்து விட்டு சாத்விகாவை மீட்டனர். விஜயநகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீகாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது.

குழந்தை இறந்ததை கண்டு சாத்விகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...