வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாடு!
ஸ்லோவேனியா வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் நகரங்களுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
அந்நாட்டின் பிரதமர் ராபர்ட் கோலோப், ஸ்லோவேனியாவை வரலாறு காணாத வெள்ளம் பேரழிவை ஏற்படுத்திவிட்டது என குறிப்பிட்டார்.
இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில், ‘பாரிய அளவிலான அழிவு மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நட்பு நாடான ஸ்லோவேனியாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடையவும், பேரழிவின் விளைவுகளை சமாளிக்கவும், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மீட்டெடுக்கவும் நான் விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
Leave a comment