download 3 1 8
இந்தியாஉலகம்செய்திகள்

திருமணத்தில் நடனமாட மறுத்ததால் மணப்பெண்ணுக்கு மண்டையுடைப்பு!

Share

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகள் நடனம் ஆடவில்லை என்பதால் பெரும் மோதல் ஏற்பட்டு அதில் மண்டை உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

குடித்த பகுதியை சேர்ந்த சுப்ரமணியம்  என்பவருக்கும்,  பச்சிளம் பகுதியைச் சேர்ந்த பூஜ்ஜிதாவுக்கும் நேற்று முன்தினம் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்று இரவு திருமண மண்டபத்தில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் குவிந்திருந்தனர். திருமண வரவேற்பின் போது பாட்டுக் கச்சேரியுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சியும் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை திருமணம் சிறப்பாக முடிவடைந்ததை தொடர்ந்து மணமக்களிற்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

அப்போது மணமகன் வீட்டார் மணப்பெண்ணை சினிமா பாடலுக்கு ஆடுமாறு கேட்டுள்ளனர்.

ஆனால் மணப்பெண் தனக்கு நடனமாடத் தெரியாது என கூற அவருடன் இணைந்து மணமகள் வீட்டாரும் பெண்ணுக்கு நடனமாடத் தெரியாது எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் இரு பகுதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாற இரு வீட்டாரின் உறவினர்களும் அங்கிருந்து நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கியுள்ளனர்.

இந்த தகராறில் உறவினர் பெண் ஒருவருக்கு மண்டையும், மற்றொருவருக்கு கையும்  உடைந்துள்ளது. அத்தோடு மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை  மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் இருதரப்பினரும் பொலிஸாரிடம் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தமையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

#word

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...