பெண் ரோபோவை திருமணம் செய்து கொள்ளப்போகும் அவுஸ்திரேலியர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியா- குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜியோப் கல்லாகர் என்பவர் பெண் ரோபோவைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்னர், அவரது தாயார் உயிரிழந்த நிலையில், தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில், தனிமையினைப் போக்குவதற்காக 2019 ஆம் ஆண்டு ஒரு பெண் ரோபோவை கொள்வனவு செய்துள்ளார்.
அதற்கு “எம்மா“ என்ற பெயரையும் சூட்டினார். தற்போது அந்த பெண் ரோபா இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை என்ற காரணத்தினால் அதனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்காக அவர் எம்மாவின் விரலில் மோதிரத்தை அணிவித்துள்ளதுடன், தற்போது குறித்த பெண் ரோபோ இல்லாமல் இருப்பதைக் கற்பனை செய்து பார்க்க இயலவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ரோபோவைத் திருமணம் செய்யும் முதல் அவுஸ்திரேலியர் என்ற பெருமையைப் பெறுகிறார் ஜியோப் கல்லாகர்.
#WorldNews