சீன அச்சுறுத்தலை மீறி தாய்வான் சென்ற அமெரிக்க சபாநாயகர்!

295843929 913840412902127 6703957077992884147 n
சீனாவின் அச்சுறுத்தலையும் மீறி அமெரிக்க சபாநாயகர், நென்சி பெலோசி தாய்வானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுளளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் ஆசியாவின சில நாடுகளுக்கு செல்லவுள்ள நிலையில் தாய்வானுக்கு விஜயம் செய்துள்ளார்.
அமெரிக்க சபாநாயகர் தாய்வானுக்கு செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்த நிலையில் அதற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது.
அமெரிக்க சபாநாயகர் நென்சி பெலோசி, தன்னுடைய ஆசியப் பயணத்தில் தாய்வானுக்குச் சென்றால் அமெரிக்கா அதற்குத் தக்க விலையைக் கொடுக்கும் எனச் சீனா எச்சரித்திருந்தது.
இருப்பினும், அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “தாய்வானுக்குச் செல்ல நென்சி பெலோசிக்கு உரிமை உண்டு” என நேற்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#world
Exit mobile version