முன்னாள் பிரதமரை கொலைசெய்ய பயங்கரவாதிகள் திட்டம்!

imrankhan 1

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கொலைசெய்வதற்கு பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு துறையின் கைபர் பக்துன்க்வா பிரிவு தெரிவிக்கையில்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கொலைசெய்வதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு கொலை செய்யும் நபரின் உதவியையும் நாடியுள்ளனர்.

இம்ரான்கானுக்கு எதிரான எச்சரிக்கை வாசகம் பல்வேறு அமைப்புகளுடன் பகிரப்பட்டு வருகிறது. இதில் அவரை குறி வைக்கும் பொறுப்பு ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்டுள்ளது – என்றுள்ளது.

#WorldNews

Exit mobile version