24 661c24b8ecc52
உலகம்செய்திகள்

இஸ்ரேல் – ஈரான் தாக்குதலின் எதிரொலி: பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை

Share

இஸ்ரேல் – ஈரான் தாக்குதலின் எதிரொலி: பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை

இஸ்ரேல் – ஈரான்(israel – iran) மோதல் போக்கானது அடுத்த நகர்வை இட்டுச்செல்லுமாக இருந்தால் பிரித்தானியாவில்(Uk) பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் நடவடிக்கை நீடித்தால் உலகின் பிற பகுதிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தொலைவில் இருக்கும் பிரித்தானியாவும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையேயான மோதல் போராக மாறினால், பிரித்தானியாவில் ஈரானிய தீவிரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாலையே ஈரான் பழி தீர்க்க முயலும் என்றும், பிரித்தானியாவில் இருந்தே ஈரான் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஈரானுக்கு பதிலடி தருவதாக இஸ்ரேல் முயன்றால், அது இன்னொரு போருக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இஸ்ரேலின் முடிவை தற்போது உலக நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் – ஈரான் பதற்றம் அதிகரித்தால் போர் ஏற்படும் என துருக்கி எச்சரித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் டமாஸ்கஸில் உள்ள தனது தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நேற்றிரவு ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு காசா மீதான போர் தீவிரமடையக்கூடும் என்று துருக்கிய வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

“இன்று, நாங்கள் ஈரானிய தலைவர்கள் மற்றும் இஸ்ரேலின் மீது செல்வாக்கு கொண்ட மேற்கத்திய நாடுகளுக்கு எங்கள் செய்திகளை தெளிவாக தொடர்பு கொள்கிறோம், விரிவாக்கத்தை நிறுத்த அழைப்பு விடுக்கிறோம்,” என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் எங்கள் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை மீளமுடியாமல் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் உலகளாவிய மோதல்களை அதிகப்படுத்தும் ஒரு செயல்முறையைத் தடுக்க நாங்கள் தொடர்ந்தும் பணியாற்றுவோம் என துருக்கி கூறியுள்ளது.

இந்நிலையில் அனைத்து நகர்வுகளும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...