கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா எறிகணைகள் வீச்சு

tamilni 468

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா எறிகணைகள் வீச்சு

கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில் எறிகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா, மீண்டும் கடல்வழி எறிகணை சோதனைகளை நிகழ்த்தியிருப்பதாக தென் கொரிய இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து தென்கொரியா கூட்டு இராணுவ பயிற்சிகளை தொடர்ந்து நடத்தி வரும் சூழலில், அதற்கு பதிலடியாக வடகொரியா தனது இராணுவ பலத்தை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் வடகொரியா இந்த ஆண்டு நடத்தியுள்ள மூன்றாவது கட்ட எறிகணை சோதனை முயற்சி இதுவென தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன், அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் வாய்ந்த எறிகணையின் முதற்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக வடகொரியா அறிவித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவுடன் இணைந்து வடகொரியாவின் இராணுவ நடவடிக்கைகளை தென்கொரிய இராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தென்கொரியா கூறியுள்ளது.

Exit mobile version