உலகம்செய்திகள்

தமிழ்நாட்டின் பெண் கோடீஸ்வரர்… மொத்த சொத்து மதிப்பு 32,800 கோடி

Share
Share

தமிழ்நாட்டின் பெண் கோடீஸ்வரர்… மொத்த சொத்து மதிப்பு 32,800 கோடி

மென்பொருள் மற்றும் சேவைகள் துறையில் உலகிலேயே இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக அறியப்படும் ராதா வேம்பு, மென்பொருள் நிறுவனமான Zoho-வின் இணை நிறுவனர் ஆவார்.

தமிழகத்தில் பெண் கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருக்கும் ராதா வேம்பு Zoho நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான ஸ்ரீதர் வேம்புவின் சகோதரி ஆவார்.

Zoho நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 19,000 கோடி என்றே கூறப்படுகிறது. இதனால் மென்பொருள் மற்றும் சேவைகள் துறையில் உலகிலேயே இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ராதா வேம்பு அறியப்படுகிறார்.

Zoho நிறுவனத்தில் ஸ்ரீதர் வேம்புவின் பங்கு வெறும் 5 சதவீதம் என்றே கூறப்படுகிறது. ஆனால் ராதா வேம்பு 47.8 சதவீத பங்கினை கொண்டுள்ளார். 2022ல் மட்டும் Zoho நிறுவனத்தின் வருவாய் என்பது 2,700 கோடி என்றே கூறப்படுகிறது.

சென்னையில் பிறந்த ராதா வேம்பு, ஐஐடி மெட்ராஸில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 1996ல் தமது உயர் கல்வியை தொடரும் போது தமது சகோதரர் ஸ்ரீதர் வேம்பு உடன் இணைந்து AdvenNet என்ற மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனத்தை நிறுவியுள்ளார்.

இந்த நிறுவனமே பின்னர் Zoho கார்ப்பரேஷன் என பெயர் மாற்றம் பெற்றது. 2023ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் ராதா வேம்புவின் மொத்த சொத்து மதிப்பு 32,800 கோடி என்றே தெரியவந்துள்ளது

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...