உலகம்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட தமிழக மக்கள்

5 29 scaled
Share

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட தமிழக மக்கள்

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹரிஸ் (Kamala Harris) அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகியுள்ளார்.

தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹரிஸ், ஜனாதிபதியாவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார்.

கமலா ஹரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் அரச சேவையில் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்த போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பி.வி கோபாலன் குடியேறினார்.அதன்பின்னரே அமெரிக்காவில் பி வி கோபாலன் குடும்பம் குடியேறியது.

இவரது இரண்டாவது மகள் சியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹரிஸ்.

இவர் வழக்கறிஞராக பணியாற்றியதோடு அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் செனட் உறுப்பினராக பதவி வகித்தார்.

அரசியலில் வளர்ந்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் வெற்றி பெற்ற போது துணை அதிபராக போட்டியிட்டு கமலா ஹரிஸ் வெற்றி பெற்றார்.

எனினும், கமலா ஹாரீஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது உறவினர்களில் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர்.

இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share
Related Articles
16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

5 8
உலகம்செய்திகள்

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இந்தியா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை “தூண்டுதலில்லாததும், வெளிப்படையான போர் நடவடிக்கையும்” எனவும் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது....

6 9
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலடி! நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு...

7 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் ஒன்பது இலக்குகள் மீது ஏவுகணைத்...