ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டங்களை தலிபான்கள் அமுல்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளைப் பிடுங்கி நடு வீதியில் தீயிட்டு எரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
வாகனங்களில் பயணிப்போர் இசையினைக் கேட்பதற்கும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இசை வாத்தியங்களை ஒலிக்கவும் தலிபான்கள் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது உள்ளூர் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடுவீதியில் தீயிட்டு எரிக்கும் காணொளிக்காட்சிகள் வைரலாகி வருகிறது.
இக்காணொளியானது ஆப்கானிஸ்தான் பாக்தியா மாகாணத்தில் எடுக்கப்பட்டுள்ளது. நடு வீதியில் இசைக்கருவி பிடுங்கப்பட்டு தீயில் எரிக்கப்படுவதைக் கண்டு அந்த இசையமைப்பாளர் அழுவதைக் கண்டு, தலிபான்கள் அவரின் அவல நிலையை கண்டு சிரிக்கின்றனர்.
#WorldNews
Leave a comment