ஆப்கானிஸ்தானில் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிற்றர் மதுவை கால்வாயில் ஊற்றிய வீடியோவை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் 6 பீப்பாய்களில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் லிட்டர் மது மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த தலிபான் அதிகாரிகள் அவற்றை கால்வாயில் ஊற்றி அழித்ததுடன் 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
இதேவேளை முஸ்லிம்கள் மதுபானத்தை தயாரிக்க, விற்க, அருந்தக் கூடாது எனப் பதிவிடப்பட்டிருந்தது. இந்த ரெய்டு எப்போது நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் இதற்கு முன்னதாக இருந்த ஆட்சியின்போதும் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
#WorldNews
Leave a comment