ஆப்கானின் தலைநகர் காபூலில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படை குண்டுத் தாக்குதலில் தலிபான்களின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல் தெரிவிக்கின்றன.
காபூலில் நேற்று மட்டும் இரண்டு பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 19 பேர் சாடைந்துள்ளதோடு 50 பேர் படுகாயமடைதுள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலின்போது, இராணுவ வைத்தியசாலையிலிருந்த தலிபான் முக்கிய தளபதி மௌலவி ஹம்துல்லாஹ் முக்லிஸ் கொல்லப்பட்டதாக ஏ.பி.எஃப். செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பின் அதிபர் மாளிகையில் புகுந்த முதல் தலிபான் தளபதி மௌலவி ஹம்துல்லாஹ் என்பது குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment