தைவானை அதிர வைத்த நிலநடுக்கம்: பகீர் தகவல்கள்

24 6611f42c85711

தைவானை அதிர வைத்த நிலநடுக்கம்: பகீர் தகவல்கள்

தைவானில் ஏற்பட்ட 7.4 ரிக்டா் அளவிலான நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் மேலும் சுமாா் 600 போ் சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, டரோக்கா பாா்க் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலின் இடிபாடுகளுக்குள் மட்டும் சுமாா் 450 போ் இருப்பதாக எதிர்பார்க்கபடுகிறது.

அதேவேளை, இந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமை தைவானின் தெற்குக் கடலோர நகரான ஹுவாலியனுக்கு சுமாா் 18 கி.மீ. தொலைவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளில் தைவான் சந்தித்திராத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதுடன் அது ரிக்டா் அளவுகோலில் 7.4 அலகுகளாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version