ஒரே பாலினத்தவர்களின் திருமணத்திற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்குவதற்கு சுவிட்சர்லாந்து முடிவெடுத்துள்ளது.
இதனையடுத்து சுவிட்சர்லாந்து. ஒருபால் திருமணத்திற்கு அங்கீகாரமளிக்கும் உலகின் 30 ஆவது நாடானது.
சுவிட்சர்லாந்தில் நடாத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்குபற்றிய சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் ஒருபால் திருமணத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். .
இவ் வாக்கெடுப்பில் பங்குபற்றிய 64 சதவீதமானவர்கள் ஒரு பாலின திருமணத்துக்குஆதரவு அளித்துள்ளனர்.
இதனால் ஒரு பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்கும் இன்னொரு ஐரோப்பிய நாடாக சுவிஸ்லாந்து ஆகிறது .
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமான அங்கீகாரம் வழங்குவது பாரம்பரிய குடும்ப அமைப்பை குறை மதிப்புக்கு உட்படுத்தும் என்று பழமைவாத அரசியல் கட்சியினரும், தேவாலயம் செல்லும் வழக்கம் உடையவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
Leave a comment