21
உலகம்செய்திகள்

பாலஸ்தீனியர்களுக்கான சமத்துவ தீ்ர்வு: சர்வதேச சமூகத்திடம் அநுர விடுத்த வேண்டுகோள்!

Share

பாலஸ்தீனியர்களுக்கான சமத்துவ தீ்ர்வு: சர்வதேச சமூகத்திடம் அநுர விடுத்த வேண்டுகோள்!

பாலஸ்தீனியர்களுக்கான சர்வதேச சட்டம் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அமைதியான சமத்துவ தீர்வு காண்பதை சர்வதேச சமூகம் கைவிடக்கூடாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலஸ்தீன மக்களிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவு தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “பாலஸ்தீன பகுதிகளிலும் மேற்குஆசியாவிலும் ஒருவருடத்திற்கு மேலாக நீடித்துவரும் பொதுமக்களின் உயிரிழப்புகளும் தொடரும் அழிவுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை சகித்துக்கொள்ள முடியாதவை.

பல சர்வதேச மன்றங்களில் இலங்கை, காசாவின் மனிதாபிமான நிலை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீனியர்களின் போராட்டத்திற்கான ஆதரவிலிருந்து இலங்கை பின்வாங்ககூடாது என்பதை பாலஸ்தீனியர்களிற்கான ஐ.நா தினம் வெளிப்படுத்துகின்றது.

தற்போது, காசாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆபத்தான விதத்தில் தீவிரமடைந்துள்ளமையும்,சர்வதேச அளவில் அதன் தாக்கமும்,பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக ஏழு தசாப்தங்களாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மேலும் அவசியமானவையாக மாற்றியுள்ளன.

பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நாவின் நிவாரண முகவர் அமைப்பிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் பல ஏற்பட்டுள்ளன.

அத்துடன், அகதிகளின் வாழ்வை தாங்கிப்பிடித்த மனிதாபிமான சேவை வீழ்ச்சியடைந்துள்ளமை ஏமாற்றமளிக்கின்றது”என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...